Wednesday, December 8, 2010

திருடப்பட்ட எனது கவிதைகள்...

நண்பர்களே, இன்று நண்பர் நிலா ரசிகன் அவர்களின் வலைப்பூவில் சென்று பார்த்தபோது அவருடைய கவிதைகள் திருடப்பட்டு ஒரு இணைய தளத்தில் அவர் அனுமதி இன்றி அவர் பெயரும் இன்றி பயன்படுத்தி இருப்பதாக எழுதி இருந்தார்...அவர் கூறிய அந்த இணைய தளத்தில் சென்று பார்த்த எனக்கு மேலும் அதிர்ச்சி...காரணம், என்னுடைய கவிதைகளையும் திருடி என் பெயரை நீக்கி என் அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள். அதோ அந்த லிங்க் http://kavithai.yavum.com/content/view/134/34/ http://kavithai.yavum.com/content/view/125/31/ http://kavithai.yavum.com/content/view/139/37/ http://kavithai.yavum.com/content/view/157/1/ அடுத்தவர்கள் கற்பனையை திருடும் அந்த இணையதள நிர்வாகி மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.... அடுத்தவர்களின் சிந்தனையை சில்லரையாக்கும் இது போன்ற இழிவானவர்கள் இனியாவது திருந்தவேண்டும்...